தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டம் .!
தென்காசி

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டம்
தென்காசி ஜுன் 30
தென்காசியில்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் ஹாலில் வைத்து நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி வரவேற்புரை ஆற்றினார். தென்காசி மாவட்ட தலைவர்கள் சிவராஜ், சுரேஷ் துணைச் செயலாளர்கள் தங்கராசு கிருஷ்ணன் செங்கோட்டை நகர செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் பொருளாளர் சையது மன்சூர் உசைன் தென் மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மாநில துணைத் தலைவர்கள் திருமலை குமார் சாமி அய்யம் பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடை செய்து நீர்நிலைகள் பாதுகாக்கப்பட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரபாண்டி வழக்கறிஞர் கிருஷ்ணன் முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா துணை செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் குலசேகரன் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மாரிமுத்து மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமாரி மாவட்ட தலைவர் மகேஷ் என்ற மாடத்தி ஒன்றிய செயலாளர் சாமி என்ற பரமசிவன் ஒன்றிய தலைவர் அருணாசலம் பொருளாளர் யாசர் அரபாத் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் ஜெயராஜ் அச்சன்புதூர் பேரூர் செயலாளர் பக்கீர் மைதீன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செங்கோட்டை நகர செயலாளர் அப்துல் மஜீத் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்