கிருஷ்ணகிரியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம். !
கிருஷ்ணகிரி
பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP. முனுசாமி BABL MLA தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எதிர் வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நமது கழக வேட்பாளரின் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் கழக வளர்ச்சிப் பணிகளை குறித்தும் கேட்டறிந்து சில மேலான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான
கே. அசோக்குமார் Mla, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM சதீஷ்குமார். BE. MBA, சேலம் மண்டலத் துணைச் செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளருமான நிர்மல் ஆனந்த், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் சூரிய பெருமாள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
