பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்ட சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திர மோகன் கலந்துகொண்டு பொது வினியோக திட்டத்தினை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி நடைபெற்றது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றுதல், புகைப்படம், கைரேகை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு முகாமிற்கு சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு கிராம மக்களிடம் பொது விநியோகம் திட்டத்தை குறித்து பேசுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் குடும்ப அட்டையை காட்டி பொருள்களை சிரமம் இன்றி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தடையின்றி அனைத்து பொருள்களும் கிடைத்திடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இதேபோல குந்தப்பள்ளி, சூளகிரி, போச்சம்பள்ளி, கோட்டப்பட்டி, ஊத்தங்கரை, ஓசூர், கக்கனூர், நடுப்பட்டி ஆகிய எட்டு இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அப்போது தனி வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், சின்னசாமி, நியாய விலை கடை விற்பனையாளர் ராஜலட்சுமி மற்றும் நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த ஜெய்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
