தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தார்.

அந்த மனுவில் மத்திய அரசு காவேரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி அமைக்க அனுமதி அளித்ததை எதிர்த்தும் விவசாயத்தை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர்கள் மீது பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் வழக்கு முடிந்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த வழக்கினை நீதிமன்றம் கொண்டு சென்று பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு நீதி மன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதை மறு பரிசிலினை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கூறுகையில்.....

விவசாயத்தை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகளுடன் சேர்த்து பி.ஆர். பாண்டியன் போராடினார். இந்த போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தி விட்டதாக கூறி தற்போது 13 ஆண்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த விவசாயிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகையால் விவசாயத்தினை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராடினார்.

ஆகையால் பி. ஆர். பாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டத்தினை மறு பரிசிலினை செய்யப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பினை மான்புமிகு நீதிபதிகள் ரத்து  செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ