அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நாளை 14 ஆம் தேதி 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .!

கிருஷ்ணகிரி

அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நாளை 14 ஆம் தேதி 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .!

கிருஷ்ணகிரி நகருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையினை யொட்டி நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நாளை 14 ஆம் தேதி 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து ஒசூர் வருகை தந்து அங்கிருந்து சொகுசு காரில் சாலை மார்க்கமாக வந்து விழா நடைபெற உள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுரி வளாகத்திற்கு வருகை தர உள்ளார்.

பின்னர் விழா மேடையில் இருந்தவாறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

இதற்கான மேடை அமைக்கும் பணிகள், பயனாளிகள் அமரும் இடம், துறை சார்ந்த அரங்குகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத் துரை, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திமுக நகர செயலாளர் அஸ்லாம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ