கம்பன் கழகம் சார்பாக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கம்பன் கழகம் சார்பாக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஸ்ரீனிவாசபுரம், ஸ்ரீ வித்யா மந்திர் மழழையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் கிருஷ்ணகிரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது.
இன்று 12.01.2026 சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கம்பன் கழகத் தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர்
சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கம்பன் கழக பொருளாளார் மு. ஸ்ரீரங்கன் மற்றும் இணைச்செயலாளர் ஜி.கே.சீனிவாசன் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டு அனைவரும் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
