கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஸ்ரீ விநாயகா பள்ளியில் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஸ்ரீ விநாயகா பள்ளியில் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சத்குரு ஸ்ரீ யோகிநாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அனைவருக்கும் மதியம் பொங்கல் விருந்து அளிக்கப்பட்டது.

செய்தியாளர்
மாருதி மனோ
