சூளகிரி அருகே விவசாயியை கடத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட நில புரோக்கர் உள்ளிட்ட பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!

கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே விவசாயியை கடத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட நில புரோக்கர் உள்ளிட்ட பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாயியை கடத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட நில புரோக்கர் உள்ளிட்ட பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வினைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பாக சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி சிவருத்ரைய்யா மற்றும் அவருடைய நண்பர் அழகேசன் ஆகிய இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சூளகிரி, இராயக்கோட்டை சாலையில் வந்த நில புரோக்கர் கேசவன் மற்றும் அவருடன் வந்த சிலர்  வழிமறித்து கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த படுகாயம் அடைந்த சிவருத்ரைய்யா மற்றும் அவருடைய நண்பர் அழகேசன் ஆகிய இருவருரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் சிவருத்ரைய்யா மீது தாக்குதல் நடத்திய  நில புரோக்கர் கேசவன் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுத்து இது வரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் மன வேதனையாடைந்த சிவருத்ரைய்யா மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நில புரோக்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய சிவருத்ரைய்யா..... 
சூளகிரி பகுதியில் நிலம் வாங்கவோ, விற்கவோ முடியவில்லை, நில புரோக்கர்கள் அடியாட்களை வைத்து ஏழை விவசாயிகளின் நிலத்தினை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.

இதனை மீறி நிலங்கள் விற்றால் மாபியா கும்பலை சேர்ந்த நில புரோக்கர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுகின்றனர், இதற்கு காவல்துறையில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நில புரோக்கர் கேசவன் மற்றும் அவரது அடியாட்கள் மூலம் என் மீதுகொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் ஏழை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் நில புரோக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ