தமிழ்நாட்டில் முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு வார ஓய்வு அளிப்பதை உறுதிப்படுத்த REST செயலி அறிமுகம். !
கன்னியாகுமரி

தமிழ்நாட்டில் முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு வார ஓய்வு அளிப்பதை உறுதிப்படுத்த REST செயலியை தொடங்கி வைத்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ..
கன்னியாகுமரி, ஜுலை12, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் அமர்ந்து கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்ட பெரும்பான்மையான காவலர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர்களுக்கு வழங்கப்படும் வார ஓய்வினை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதனை நேரடியாக கண்காணிக்கும் பொருட்டும் *REST(Web Portal for Week Off)* செயலியின் செயல்பாட்டை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .இரா.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலமாக அனைத்து காவலர்களும் செல்போன் மூலமாகவே தங்களுக்கு தேவையான நாட்களில் தங்களது வார ஓய்வினை கேட்டு விண்ணப்பம் அளிக்க முடியும் . மேலும் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அந்தந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர்கள் போலீசாரின் வார ஓய்வு கோரிக்கைக்கு ஒப்புதல் அளிப்பர்.
இதனை உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் போலீசாருக்கான வார ஓய்வினை உறுதிப்படுத்த முடியும். இந்த செயலி போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.