துவாரகா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி மாணவ ,மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.!

கிருஷ்ணகிரி

துவாரகா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி மாணவ ,மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.!

பெரியமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள துவாரகா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி மாணவ ,மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் திருநாள் பள்ளி, கல்லூரிகளில் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள துவாரகாபுரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி மற்றும் துவாரகாபுரி கல்லூரி சார்பில் 10 ஆம் ஆண்டு பொங்கல் விழா வெகு விமர்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை பள்ளியின் தாளாளர் கோகுல் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து புது மண்பானையில் பொங்கலிட்டனர்.

சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் செங்கரும்புகள், மஞ்சள் கிழங்கு, மாவிலை தோரணங்கள் கட்டி, சூரிய கடவுளுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு வழிபட்டனர்.

பின்னர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் ஒன்றான சிலம்பம், உறுதி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் புத்தாடை அணிவித்து பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ