பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி சாலையில் விபத்தில் சிக்கி தவித்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி சாலையில் விபத்தில் சிக்கி தவித்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த நபரைக் கண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் காரில் இருந்து இறங்கி வந்து தண்ணீர் கொடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனித நேயத்தினை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரை டாக்டர் சந்திரமோகன் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடைபெற்று வரும் சிறப்பு
SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுவதற்காக சென்றபோது பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி என்ற இடத்தில் வரும் போது சாலையில் ஒருவர் வாகனத்தில் அடிப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வருவதை கண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த முதியோருக்கு தண்ணீர் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்த நபரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சின்ன காரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் இரு சக்கர வாகனத்தில் வரும் போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் ராமசந்திரன் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்து ஆம்புலன்ஸ் வரும் வரை அங்கேயே இருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  மாவட்ட ஆட்சியரின்  மனித நேயத்தினை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரை டாக்டர் சந்திரமோகன் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ