விவசாயம் செய்து வந்த நிலத்தினை அத்துமீறி தென்னங்கன்றுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்திய வருவாய் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு. !

கிருஷ்ணகிரி

விவசாயம் செய்து வந்த நிலத்தினை அத்துமீறி தென்னங்கன்றுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்திய வருவாய் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு. !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கே.பாப்பாரப் பட்டியில் கடந்த பல தலைமுறைகளுக்கு  மேலாக விவசாயம் செய்து வந்த நிலத்தினை அத்துமீறி தென்னங்கன்றுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்திய வருவாய் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பாதிகப்பட்டவர்களுடன் புகார் மனுவினைக் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கே.பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் கடந்த பலதலை முறைகளாக  நத்தம் புறம்போக்கு நிலமான 1.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்,

இந்த நிலையில் இவர்கள் விவசாயம் செய்து வரும் நிலம் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம். இதனை யாரும் விவசாயம் செய்யக்கூடாது, யாரும் குடியிருக்கக் கூடாது என்று  கடந்த 26 ஆம் தேதி  திடிரென காவல் துறையினரின் உதவியுடன் ஊத்தங்கரை மண்டல துணை வட்டாச்சியர் சதாசிவம் மற்றும் வருவாய்துறையினர் எந்த ஒரு முன்னறிப்புகளும் தெரிவிக்காமல், தென்னைமரச் செடிகள், முருங்கை மரங்கள் மற்றும் குடிசைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரின் குடும்பத்தினர் பிடுங்கப்பட்ட தென்னங்கன்றுகளை கண்டு ஒப்பாரி வைத்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சம்பத் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர்
சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் 
டாக்டர் சந்திரமோகனிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குரள் அவர்களை நேரில் சந்தித்து எந்தவிதமான முன்னறிவிப்புகளும் இன்றி குடியிருந்து வந்த குடிசை வீடு மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்து விட்டு சென்ற வருவாய்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவினைக் கொடுத்தனர்.

இது குறித்துசமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கூறுகையில்....
கடந்த பல தலைமுறைகளால்  நத்தம் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் திடிரென வருவாய் துறையினர் அத்துமீறி நிலத்தில் புகுந்து குடிசைகளை இடித்து தள்ளியதோடு நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளையும் வேரோடு பிடுங்கி அழித்து விட்டு சென்றுள்ளனர்.

ஆகையால் பல தலைமுறைகளால் விவசாயம் செய்து வந்த  நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விட்டு சென்ற வருவாய் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ