கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு திறமையான தகுதியான மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு திறமையான தகுதியான மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இன்னும் 20 நாட்களுக்குள் தகுதியான மாவட்டத் தலைவர் இளம் தலைவர் ராகுல் காந்தியால் அறிவிக்கப்படுவதாக கமிட்டி பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திடும் வகையில் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்திற்கு புதியதாக திறமையான தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கர்நாடகா மாநிலம் சிவாஜி நகர் சட்ட மன்ற உறுப்பினர் ரிஸ்வான் அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வசந்தராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சரவணகுமார், சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் வீரப்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் ஆகிய இரு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திட திறமையான தகுதியான மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தகுதியான மாவட்டத் தலைவர்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு கமிட்டியின் தலைவர் ரிஸ்வான் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திடும் நோக்கில் மாவட்டம் வாரியாக தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்வதற்காக மாவட்டங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியினர்களை ஒன்றிணைத்து மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்வதற்காக ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் தேர்வு செய்யபடும் நபர்கள் குறித்து மாநில காங்கிரஸ் கட்சியின் மூலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டு இளம் தலைவர் ராகுல் காந்தியின் மூலமாக மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
குறிப்பாக இந்த தேர்வில் முதல்முறையாக யாருடைய தலையீடுகள் இன்றி இன்னும் 20 நாட்களில் தகுதியான மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதில் எந்த விதமான முறைக்கேடுகள் இன்றி மிகவும் நேர்மையான முறையில் இந்த மாவட்டத் தலைவர்கள் ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, மாநில பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், ஓசூர் மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர், மாவட்ட பொருளாளர் உமர், ரயில்வே திட்ட கமிட்டி உறுப்பினர் ரகமத்துல்லா, ஓசூர் மாநகராட்சி தலைவர் தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள். ஏகம்பவாணன், ஆறுமுகம், கிராம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குமரேசன், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் துரை என்ற துரைசாமி, முத்து, நகர காங்கிரஸ் தலைவர்கள் லலித் ஆண்டனி, ஸ்ரீராம், சிறு பான்மை பிரிவு துணைத் தலைவர் சாதிக், கலைப் பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, ஓ.பி.சி மாவட்டத் தலைவர் தலைவர் ஆஜீத்பாஷா, முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், தக்காளி தவமணி, நகர துணைத் தலைவர் இருதயம், ராகுல் காந்தி போர்படை தளபதி ராமசந்திரன், மாவட்ட செயலாளர் ஹரி, ஹரிஸ்பாபு, கீர்த்தி ரெட்டி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுமான், குமரி மகாதேவன், சீனிவாசன், அகில இந்திய விவசாய அணியின் துணைத் தலைவர் சூரியகணேஷ், தொகுதி பொறுப்பாளர்கள் திம்மப்பா, ஆடிட்டர் வடிவேல் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்திக், ஷானவாஸ், கவுன்சிலர் வினாயகம், ராதாகிருஷ்ணன், தக்காளி தவமணி, கோவிந்தன், செய்வராஜ், சென்னப்பன், வின்கா, மைஜாஅக்பர், ஓசூர் மாநகர துணைத் தலைவர் மனோஜ் குமார் செல்லப்பா, பீட்டர், ஆடிட்டர் வடிவேல், முன்னாள் வட்டாரத் தலைவர் விவேகானந்தன், முன்னால் நகர தலைவர் முபாரக், சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ்,. கல்லாவி ரவி,
மின்டிகிரி ரவி, திருமால், கோபால கிருஷ்ணன், ஜாக்கப், சூளகிரி கிருஷ்ணமூர்த்தி, திருமால், சத்தி, ஓ.பி.சி.மாவட்ட தலைவர் கவியரசன், யாதவராஜ், அப்சல், ஒசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி, நீலகண்டன், பாக்கிய லட்சுமி, கார்த்திகேயன், கோவிந்தசாமி, ராசையா, உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அனைத்து மாநில, மாவட்ட, நகர, வட்டார, பேரூராட்சி முன்னாள், இந்நாள் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
