கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான, மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் துவங்கிய மண்டல அளவிலான குத்து சண்டை மற்றும் ஜுடோ போட்டிகளை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்தார், இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான, மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்பால், நீச்சல், ஹாக்கி, கபடி மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 1542 மாணவிகளும், 342 பொது பிரிவு பெண்கள் என மொத்தம் 1884 நபர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதனையடுத்து தடகளம், நீளம் தாண்டுதல், ஹாக்கி, குண்டு எறிதல், வட்டு எறிதல், கூடைப்பந்து, எறிபந்து, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டல அளவிலான குத்துசண்டை, டென்னிஸ், ஜூடோ போட்டிகள் நடத்தப்பட்டது.


இப்போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மண்டல அளவில் துவங்கிய குத்துசண்டை, டென்னிஸ், ஜூடோ ஆகிய போட்டிகளை துவக்கி வைத்து பேசும்போது.....
தமிழக முதல்வர் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் 174 வகையான விளையாட்டுகளை அறிமுகம் செய்து உள்ளார். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு 37 கோடி மதிப்பிலான பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் போட்டியில் கலந்துகொண்டுள்ள வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தமிழக முதல்வர் திருக்கரங்களால் பரிசுகள் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து குத்துசண்டை, டென்னிஸ், ஜூடோ ஆகிய போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அப்போது மாவட்ட விளையாடு அலுவலர் ராஜகோபால், ஏகம்பவாணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அஞ்சூர் நாகராஜ், நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேல்மணி, மார்கண்டேயன் உள்ளிட்ட பயிற்சியாளர்களும்
உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
