ஓசூர் மாநகராட்சி கல்வி குழு தலைவருக்கு கல்வி அமைச்சர் விருது வழங்கி பாராட்டு..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கல்வி குழு தலைவருக்கு கல்வி அமைச்சர் விருது வழங்கி பாராட்டு.
திருச்சியில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்விப் பணிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகின்றது.
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் இந்த விழா 26 வது ஆண்டாக நடத்தப் பட்டது. இந்த விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், ஓசூர் மாநகராட்சி கல்விக் குழு தலைவர் எச். ஸ்ரீதர் அவர்களுக்கு கல்வித்துறையில் ஓசூர் மாநகராட்சியில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதை ஊக்கப்படுத்தும் வகையில் அன்பில் 26 என்ற விருது வழங்கி பாராட்டியுள்ளார்.
இந்த விழாவில் இணை இயக்குனர் திரு வை . குமார் மற்றும் ஆசிரியர் மனசத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ