கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு ஆரங்கில் துவங்கிய விளையாட்டு போட்டிகளை கடந்த 26-ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்து, வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
அதில் கல்லூரி மற்றும் பொதுப்பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்ட்பால், நீச்சல், ஹாக்கி, கபடி மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் 1542 மாணவிகளும் 342 பொது பிரிவு பெண்கள் என மொத்தம் 1884 நபர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதனையடுத்து இன்று தடகளம், நீளம் தாண்டுதல், ஹாக்கி, குண்டு எறிதல், வட்டு எறிதல், கூடைப்பந்து, எறிபந்து நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி காயத்திரி தேவி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நகர் மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப், மாவட்ட விளையாடு அலுவலர் ராஜகோபால், மாவட்ட கால்பந்து பயிற்றுநர் நடராஜமுருகன், மார்க்கேண்டேயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட அளவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகள் அடுத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ