திமுக கொடி கட்டி வந்த சொகுசு காரை மது அருந்தி ஓட்டிய நபர்களை வழக்குப் பதிவு செய்யாமல் விட்ட போலீசார். ! பொதுமக்கள் வீடியோவால் பல கேள்விகள். !

கோவை

திமுக கொடி கட்டி வந்த சொகுசு காரை மது அருந்தி ஓட்டிய நபர்களை வழக்குப் பதிவு செய்யாமல் விட்ட போலீசார். ! பொதுமக்கள் வீடியோவால் பல கேள்விகள். !

கோயம்புத்தூரில் காந்திபுரம், அடையார் ஆனந்த பவன் பின்புறமுள்ள NGN சாலையில் இரவு நேரத்தில் ஒரு சொகுசு கார் வந்துள்ளது.

அந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது.. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், அந்த காரை மறித்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவையில் காரில் திமுக கொடி

இந்நிலையில் கோவையில் தற்போது போதைப்பொருள் பழக்கமும், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக போலீசார், இரவு நேரங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு நேரம் ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.. அப்போது காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த நபர்கள் மது போதையில் இருந்ததை கவனித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரில் சோதனை - வீடியோ

பிறகு அந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல போகிறோம் என்று கூறிய போலீசார், அந்த நபர்களை ஆட்டோவில் போகுமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அந்த நபர்களின் காரை சோதனையிடப்பட்டபோது, ஏகப்பட்ட மது பாட்டில்கள் அதில் இருந்துள்ளன. மேலும் "காரில் பணம் வைத்திருந்தோம், அதை இப்போது காணவில்லை" என்று சொல்லி விடக்கூடாது என்பதற்காகவே, காரைச் சோதனையிடுவதை செல்போனில் வீடியோ எடுக்குமாறு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டோம். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த நிகழ்வையெல்லாம் அந்த பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையத்திலும் வெளியிட்டு விட்டார்கள்.. அதுதான் தற்போது வெளியாகி பலரையும் விக்கித்து போக செய்துள்ளது.

கிளம்பிய கேள்விகள்

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது..

"சாதாரண மக்கள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால் உடனே கேஸ் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள்.. ஆனால், திமுக கட்சி கொடி கட்டி வந்தால் நடவடிக்கை எடுப்பதில்லையா?

திமுக கட்சி கொடி இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லையா? சட்டம் திமுக பிரமுகர்களுக்கு இல்லையா?" என்று கேட்டு வருகிறார்கள்..

மேலும் சிலர், "உண்மையிலேயே காரில் வந்தவர்கள் திமுகவினரா? அல்லது வேண்டுமென்றே திமுக கொடியை காரில் கட்டி வந்தார்களா? என்பது உறுதியாக தெரியாது..

எனவே போலீசார் இதில் தலையிட்டு உண்மையை விசாரிக்க வேண்டும்" என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.