கங்கம்மா மாரியம்மன் கோவில் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் .!

கிருஷ்ணகிரி

கங்கம்மா மாரியம்மன் கோவில் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பெரிய மோதுக்கான பள்ளி கிராமத்தில் இன்று கங்கம்மா மாரியம்மன் கோவில் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு ஊர் பெரியோர்கள் தாய்மார்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக கும்பாபிஷேகம்  விழாவினை நடத்தினார்கள். இங்கு மேலும் சுற்றி இருக்கும் கோவில்கள் முனீஸ்வரன், எல்லம்மா, நாக தேவதைகள், விநாயகர் ஆகிய கோயில்களுக்கு பிரதிஸ்டாபனையும் செய்து முடிக்கப்பட்டது.

கும்பாபிசேகத்தை முன்னிட்டு மலர் அலங்காரம், யாக பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இங்கு வந்த அனைத்து பக்தர்களையும் பெரியோர்களையும் தாய்மார்களையும் நல்ல முறையில் வரவேற்பு தந்து இக்கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

கும்பாபிஷேகம் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதேபோன்று ஆடு கோழி 48 நாட்கள் பலியிட கூடாது என்றும்,  கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் மது, கறி விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது அதேபோன்று ஊர் மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு எடுக்கப்பட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ