கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முன்னால் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முன்னால் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலுவிடம் காவேரிப்பட்டினம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்தி மண்டபத்தின் தொடர்பான ஆவணங்களை முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி வழங்கினார்.
வருகின்ற 7-ம் தேதி திருநெல்வேலியில் மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் மாநாடு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தினை திரும்பி பார்க்கும் வகையில் பெரும் திரளாக காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை கே.வி. தங்கபாலு அவர்கள் தொகுதி வாரியாக சந்தித்தித்தார்
அப்போது ஓசூர் , தளி,பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி
ஆகிய சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதி இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும்,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்கின்ற வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பெரும் திரளாக காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்,
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் கே.வி. தங்கபாலு அவர்களிடம், காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்தி நூற்றாண்டு மண்டபத்தின் ஆவணங்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.
அப்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் எல்,சுப்பிரமணியன், நாஞ்சில் ஜேசு, ராஜா குமார வேல், கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, ஏகம்பவாணன், மாநில செயலாளர் ஆறுமுகம், திட்டக்குழு உறுப்பினர் ரகு, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் துரை என்ற துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிராம கமிட்டி உறுப்பினருமான ஆறுமுக சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி, ஒசூர் மாநகர காங்கிரஸ் நகர தலைவர் தியாகராஜன், முன்னாள் நகர தலைவர் வின்சென்ட், கலை பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முன்ராஜ், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து, ராகுல் காந்தி போர்படை தளபதி ராமசந்திரன், முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, கவுன்சிலர் இராதா கிருஷ்ணன், கோவிந்தன், வட்டார தலைவர்கள் சித்திக், அப்சல், தனஞ்செயன், பாகிருஷ்ணன், திருமால், முருகன், மின்டிகிரி ரவி, ஷானவாஸ், மீனவரணி செல்வம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரஸ் சரவணன், குட்டி, பாண்டுரங்கன், சத்தி, மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ