புதிய அங்காடி கட்டிடம் கட்டப்படுமா?

பாபநாசம்

புதிய அங்காடி கட்டிடம் கட்டப்படுமா?

புதிய அங்காடி கட்டிடம் கட்டப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியம் எடவாக்குடி ஊராட்சி காந்தாவனம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்த கட்டிடம் இருக்கிறது.

இந்த கட்டிடத்தில் தான் பொதுமக்கள் தினமும் ரேசன் பொருள்களை வந்து வாங்கி செல்கின்றனர். நாளடைவில் கட்டிடம் பழுதடைந்த நிலையில் அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சிக்கு புதிய கட்டிடம் வேண்டுமென திமுக கிளை கழக செயலாளர் கோட்டூர் அருணாச்சலம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும் உங்கள் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.குமாரிடம் கடிதம் வாங்கி வாருங்கள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டித் தருகிறேன் என கூறியிருக்கிறார்.பலமுறை சென்று கேட்கும் பொழுது தருகிறேன் தருகிறேன் என்று கூறி இதுவரை தரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து கிளை செயலாளர் கோட்டூர் அருணாச்சலத்திடம் கேட்டபோது எங்கள் தெற்கு ஒன்றிய செயலாளர் எந்த கூட்டம் போட்டாலும் எங்களுக்கு சொல்வதில்லை எந்த நிகழ்ச்சியும் சொல்வதில்லை என்றும் இதுவரை பலமுறை சவால் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன் கொடுக்கவில்லை என்று கூறினார்.எனவே கட்டிடம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது இதுவரை எங்களுக்கு பொது விநியோக கட்டிடம் வரவில்லை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் செயல்படுகிறது எனவே விரைவில் எங்களுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்

பாபநாசம் இன்பம்