ப.சிதம்பரத்தின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை வழங்கிய காங்கிரஸார். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை காங்கிரஸ் கட்சியின் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டது.
இதன் முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருமான ஏகம்பவாணன் அவர்களின் தலைமையில் கிருஷ்ணகிரியில் உள்ள சித்தி வினாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,
அப்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், பூரி, கிச்சடி, வடை, கேசரி உள்ளிட்ட இனிப்புகளை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருமான ஏகம்பவாணன் வழங்கி துவக்கி வைத்தார்
மேலும் இந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாகுமாரவேல், காங்கிரஸ் கட்சியின் SCst துறையின் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சுப்பிரமணி, நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, சிறுபான்மை பிரவு ஆஜீத் பாஷா, வேப்பனஹள்ளி ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் டைகர் பிரேம், ராஜு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நஞ்சுண்டன், சக்தி, முகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ