மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்..!

கிருஷ்ணகிரி

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்..!

கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட போகனப்பள்ளி கிராமத்தில் உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டு குளியுமாக காணப்பட்டது.

இதனால் இந்த சாலையில் சென்ற வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர், ஆகையால் இந்த சாலையை தார்சலையாக மாற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் போகனப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 24 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை போகனப்பள்ளி  கிராமத்தில் நடைபெற்றது, இதனை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்துக் கொண்டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து போகனப்பள்ளி கிராமம் வரை தார்சாலை அமைப்பதற்கான பணியினை பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த பூமி பூஜையின் போது மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கலை இலக்கிய பகுத்தறி பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன் துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த  தக்காளி மாணிக்கம், நாராயணன், ரகு குமார், வடிவேல், ரஜினி முனிஷ், குணசேகரன், பையம்மாள் முருகன், பழனி முருகன், பால்ராஜ், கெளரப்பன், சங்கர், ஊர் கவுண்டர் முனியப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ