தமிழக முதல்வர் வருவதையொட்டி விழாமேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் பணி .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகருக்கு தமிழக முதல்வர் வருவதையொட்டி விழாமேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் பணியினை தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூமி பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகைத்தர உள்ளார். இதற்கான விழா மேடை அமைக்க, கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானம் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களான மதியழகன், பிரகாஷ், ராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துக் கொண்ட தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பூமி பூஜைகள் செய்து விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி மற்றும் சமுக நுகர்வோர் பாது காப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன், துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேல்மணி, அஞ்சூர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் தனசேகரன், துனைச் செயலாளர் சாவித்திரி, வர்த்தக அணி அமைப்பாளார் அன்பரசன் மற்றும் திமுகவை சேர்ந்த சரவணன், மீசை அர்ச்சுனன், ஜெய்சன், ஆனந்தன், வேலயுதன், கோவிந்தசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ