சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 40 ஆயிரம் பரோட்டா தயார் செய்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி

சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 40 ஆயிரம் பரோட்டா தயார் செய்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 40 ஆயிரம் பரோட்டா தயார் செய்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள்  கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி  சுங்கச்சாவடி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல்தோப்பு தர்காவில் ஆண்டுத் தோறும் மிலாடிநபி விழா வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மிலாடி நபி சிறப்பு துவாவுடன் துவங்கியது.

தர்கா கமிட்டி தலைவர் நவாப்  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தர்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரங்களில் சங்கல் தோப்பு தர்காவை சார்ந்த மஸ்தாணி அம்மா மற்றும் பாபுஷா ஆகியோர் முன்னிலையில் கொடி ஏந்தி வைத்து சிறப்பு துவா மற்றும் பாத்தியாவும் நடத்தப்பட்டது,

மிலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா மாநிலம் குப்பம் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் ஏராளமான மக்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டு எந்த விதமான நோய் நொடிகள் இன்றி சுபிட்சமாக வாழ வேண்டி துவா மேற்கொண்டனர். 

மேலும் இந்த விழாவில் 1,500 கிலோ மைதா மாவினைக் கொண்டு சுமார் 40 ஆயிரம் பரோட்டா தயார் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி மூன்று மாநில பக்தர்களும் சாதி மத வேறுபாடுகள் இன்றி கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ