ஒசூரில் விநாயகர் சிலைக்கு மந்திரங்கள் கூறி பூஜை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்: ராஜஸ்தான் ஸ்டைலில் தலைப்பாகை கட்டி ஊர்வலத்தில் பங்கேற்பு..!
கிருஷ்ணகிரி

ஒசூரில் விநாயகர் சிலைக்கு மந்திரங்கள் கூறி பூஜை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்: ராஜஸ்தான் ஸ்டைலில் தலைப்பாகை கட்டி ஊர்வலத்தில் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, ஜனப்பர் தெருவில் 12 ஜோதிர் லிங்கங்களை வழிபட்ட பிறகு, சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யும் முருகன், விநாயகர் போன்ற வடிவில் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
ஒசூர் பகுதி முழுவதும் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று வெகுவிமர்சையாக கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது..
இந்தநிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஜனப்பர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை கூறி, விநாயகர் சிலைக்கு ஆரத்தி தட்டைக்கொண்டு பூஜை செய்தது பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். ராஜஸ்தானை மாநிலத்தில் பிரபலமான தலைப்பாகை பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது..
பின்னர் தலைப்பாகையுடன் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்றார்.
செய்தியாளர்
மாருதி மனோ