வேலை தேடி சென்ற பட்டதாரி இளைஞருக்கு 2 கோடி ரூபாய் ஜி.எஸ். டி. வரி கட்ட சம்மன் வந்ததால் அதிர்ச்சி..!
கிருஷ்ணகிரி
வேலை தேடி சென்ற பட்டதாரி இளைஞருக்கு 2 கோடி ரூபாய் ஜி.எஸ். டி. வரி கட்ட சம்மன் வந்ததால் அதிர்ச்சி. பாதிக்கப்பட்ட இளைஞர் இத்ரிஸ் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்தவர் ரஹ்மான் ஷெரீப் இவரது மகன் இத்ரிஸ் வயது 24, MBA படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பரான கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரிடம் ஏதாவது ஒருவேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்துல் கலாம் விருதாசலத்தில் கிராப் கம்பெனி ஒன்று உள்ளது. அங்கு நீ வேலைக்கு சேர்ந்து வரவு செலவு கணக்கு பார்த்தால் போதும் நல்ல சம்பளம் கிடைக்கும் அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் தான் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதை நம்பிய இத்ரிஸ் வேலைக்கு சேர ஒப்புக்கொண்டார்.
பின்னர் அப்துல் கலாம் வேலூரில் உள்ள அவரது நண்பர் நதீம் என்பவரை செல் போன் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் செப்டம்பர் 18, 2024 ஆம் தேதி நதீம் வேலூரில் இருந்து கார் மூலம் இத்ரிஸை அழைத்துக்கொண்டு ஸ்க்ராப் கம்பெனியை பார்ப்பதற்கு விருதாச்சலம் சென்றனர்.
கூடலூர் சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் செட் அமைக்கப்பட்ட இடத்தில் நதிம் இத்ரிஸிடம் அந்த செட் அருகாமையில் நிற்க வைத்து போட்டோ எடுத்துள்ளார். பின்னர் இந்த இடத்தில்தான் ஸ்க்ராப் கம்பெனி நடத்தப்பட உள்ளதாக நதீம் கூறி இருக்கிறார்.
பின்னர் நதீம் இத்ரிஸ்யிடம் தானும் அப்துல் கலாமும் சேர்ந்து இந்த ஸ்கிராப் கம்பெனியை நடத்தி வருவதாக கூறி இத்ரிஸிடம் இருந்து ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற ஆவணங்களை பெற்றுக்கொண்டு மீண்டும் இத்ரிசை கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் 2024 அக்டோபர் மாதம் 10 - தேதி மீண்டும் இத்ரிஸை விருதாசலத்திற்கு வரும்படி அப்துல் கலாம் அழைத்துள்ளார்.
உடனே விருதாச்சலத்திற்கு புறப்பட்டு சென்ற இத்திரிஸிடம் நதீம் உனக்கு சம்பளம் வழங்க வேண்டும் அதனால் உன்னுடைய பெயரில் பெடரல் வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் எனக் கூறி விருதாச்சலத்தில் புதிய வங்கி கணக்கை துவக்கியுள்ளனர் பின்னர் இத்திரிசுக்கு சம்பளம் முதல் தவணையாக ரூபாய் 7000 அவரது கணக்குக்கு அப்துல் கலாம் அனுப்பியுள்ளார்.
பின்னர் இத்திரிசை மீண்டும் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி உள்ளனர் இந்த நிலையில் அப்துல் கலாம் மற்றும் அவரது நண்பர் நதீம் ஆகியோர் இத்திரிசை மீண்டும் கான்பிரன்ஸ் கால் மூலம் அழைத்து விருதாச்சலத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர் தன்னை சுற்றி ஏதோ சதி நடக்கிறது என உணர்ந்து கொண்ட இத்ரிஸ் தான் வர இயலாது என கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 31-10:2025 அன்று இத்ரிஸ்க்கு கடலூர் GST ஆணையர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் இத்ரிஸ் பெயரில் பான் கார்டு மற்றும் ஆதார் மூலம் GST கணக்கு துவக்கி நிறுவனம் நடத்தி பல கோடி கணக்கில் வரி மோசடி செய்துள்ளீர்கள் உடனடியாக GST வரி பணமாக ரூபாய் 2 கோடி 8 லட்சம் வரியை செலுத்த வேண்டும் என இத்ரிஸ்க்கு நோட்டீஸ் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு வேலை தேடி சென்ற தனக்கு, தன் நண்பர் அப்துல் கலாம் மற்றும் அவரது நண்பர் நதீம் ஆகியோர் தனது பெயரை வைத்து கோடி கணக்கில் வரி மோசடி செய்தது தெரியவந்ததை அறிந்த இத்ரிஸ் சமுக நுகர் வேர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று தன் பெயரில் ஜி.எஸ்.டி .வரி வரி மோசடி நடந்துள்ளதாகவும் இது போன்ற மோசடி செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தன் மீது எந்த தவறும் இல்லை என கூறி தன்னை இந்த பிரச்சனையில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
