தென்காசியில் விமான நிலையம் அமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் பாஜக மாவட்ட தலைவர் கோரிக்கை மனு.!
தென்காசி
தென்காசியில் விமான நிலையம் அமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் பாஜக மாவட்ட தலைவர் கோரிக்கை மனு
தென்காசி டிச 23
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யசாமி தென்காசி பகுதிக்கான UDAN (உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) விமான நிலையம் அமைக்க வேண்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோஹன் நாயுடு கிஞ்சராப்பு வை டெல்லியில் நேரில் சந்தித்து பிரதிநிதித்துவம் அளித்தார்.அதில்
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருநெல்வேலி, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி ஆகியவை தொழில், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணங்களில் மிகுந்த வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருந்தாலும், விமான இணைப்பின்மை காரணமாக போதிய வளர்ச்சி பெறாமல் இருப்பது குறித்தும் குறிப்பாக, தென்காசி சபரிமலை யாத்திரைக்கான முக்கிய நுழைவாயிலாகவும், குற்றாலம் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா மையமாகவும் திகழ்வதுடன், ஜோகோ போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளும் உள்ளன.
இருப்பினும்அருகிலுள்ள விமான நிலையங்கள் தொலைவில் இருப்பதால் பொது மக்களும் தொழில் துறையும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
UDAN விமான நிலையம் அமைக்கப்பட்டால், தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெரிதும் ஊக்குவிக்கப்படும் என ஆனந்தன் அய்யசாமி வலியுறுத்தினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
