கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.!

கிருஷ்ணகிரி

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.!

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்குட்டபட்ட சின்ன எரண்டப்பள்ளி  கிராமத்தில் உயிரூட்டல் அறக்கட்டளை – கல்வி மேம்பாடு மற்றும் குழந்தைகள் கற்றல் மையம் சார்பில், கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்வை  திருமதி சகுந்தலா சந்திரசேகர் ஒருங்கிணைத்தார். நன்கொடையாளர்  மு. சந்திரசேகர் மற்றும் தன்னார்வலர்கள் திரு. சத்யராஜ், திரு. கணேஷ், திரு. சந்தோஷ்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு. சம்பத் குமார்  சமூகப் பொறுப்பு, மனித நேயம், உணவு வீணாகுவது குறித்து விழிப்புணர்வு உரை வழங்கினார்.

முடிவில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன.