கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2025-2026  திட்டத்தில்  கீழ் ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள். !

கிருஷ்ணகிரி

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2025-2026  திட்டத்தில்  கீழ் ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள். !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் பேரூர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2025-2026  திட்டத்தில்  கீழ் ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் காவேரிப்பட்டிணம் பேருராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை  தினசரி சந்தைக் கட்டிடம் அமைத்தல் மற்றும்  ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கழிப்பறை கட்டிடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி  மற்றும் கிருஷ்ணகிரி  கிழக்கு  மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்,MLA , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் .ச.தினேஷ்குமார், இ.ஆ.ப  ஆகியோர்  பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்  கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ