சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் .!

கிருஷ்ணகிரி

சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள்  காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான 
எல் .சுப்பிரமணியன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதில், வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியாவுக்கு எப்படியாவது சுதந்திரம் பெற்று கொடுத்து சுதந்திர காற்று சுவாசிக்க வேண்டும் என்று  மகாத்மா காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ், காமராஜர், கப்பலோட்டிய தமிழர், பகவத்சிங், கொடி காத்தகுமரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் போராடி இரத்தம் சிந்தி பெற்ற இந்த சுதந்திரத்தினை நாம் அனைவரும் போற்றி வணங்கிட வேண்டும், குறிப்பாக சுதந்திர இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்த தியாகிகளை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து போற்றிட வேண்டும்,

மேலும் இந்த நன்நாளில் சாதிமத பேதமின்றி நாம் அனைவரும் ஒரே தாய் மக்களாக ஒன்றிணைந்து நாட்டில் நிலவும் மதவாத சக்திகளை வேரறுத்து மீண்டும் ஒரு சுதந்தர காற்றினை சுவாசிக்க வேண்டும். அதற்காக அனைவரும் இந்நாளில் சபதம் ஏற்று சுதந்திர தினத்தினை சிறப்பாக கொண்டாடுவோம் என்று கூறியதோடு அனைவருக்கும் தனது சுதந்திர இந்தியாவின் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை எல். சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாருதி மனோ