உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன் நேரில் ஆய்வு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாரூர் பெரிய ஏரி, கே.ஆர்.பி. அணை மற்றும் ஒசூர் கெலவரப்பள்ளி அணை ஆகிய நீர்நிலைகளில் இருந்து அண்மையில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது, ஏர் ஓட்டி, நாற்று நடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் உரக்கடைகளில் போதிய உரம் கிடைப்பது இல்லை என விவசாயிகள் மத்தியில் பரவலாக வதந்திபரவியதை அடுத்து அரசு, மற்றும் தனியார் உரக்கடைகளில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன் மற்றும் மாவட்ட உர தரக்கட்டுப்பாடு அலுவலர் சுரேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரக்கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதா என்று உரக்கடை பதிவேட்டினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் இந்த ஆய்வின் போது விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடுகள் இன்றி வழங்க வேண்டும், குறிப்பாக யூரியா போன்ற உரங்களை பதுக்கி வைத்து விட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் இது குறித்து பேசிய வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் தீவிரமாக நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அரசு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அனைத்து உரங்களும் இருப்பு உள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ