மின்னொளியில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில்   24 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் விளையாட்டு .!

கிருஷ்ணகிரி

மின்னொளியில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில்   24 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் விளையாட்டு .!

கிருஷ்ணகிரியில் மின்னொளியில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் 
 24 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் விளையாடி வருகின்றது..

கிருஷ்ணகிரி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் 7வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கியது. இந்தப் போட்டியில் சென்னை, கோவை, கரூர், தர்மபுரி, ஓசூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர். சேலம், நெய்வேலி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைசிறந்த அணிகளான 24 அணிகள் கலந்துகொண்டுள்ளன.

மின்னொளியில் துவங்கி உள்ள இந்த கூடைப்பந்து போட்டியில் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூடைப்பந்துப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பரிசு தொகை மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையும் வழங்கப்படஉள்ளது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கில்பெர்ட், துணைத் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் ராகவேந்திரன், துணை செயலாளர் சபாஸ் பாஷா மற்றும் அன்பு ராஜ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ