திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

திருப்பூர்

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA பங்கேற்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள 50/-சதவீத வரி உயர்வினால் ஜவுளித்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது,குறிப்பாக திருப்பூரை போன்ற மிகப்பெரிய தொழில் நகரங்களின் வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது ,

இந்த வரி உயர்வை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மோடி அரசை கண்டிக்கு விதமாக ,திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA கண்டன உரையாற்றினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், சு.வெங்கடேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,முன்னாள் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், விசிக தலைவர் திருமாவளவன்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தங்கபாலு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
முஹமது அபுபக்கர், திராவிடர் கழகம்
கவிஞர் பூங்குன்றம் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினார்கள்..

இந்த நிகழ்ச்சியில்  மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்த்தனர்.