கிருஷ்ணகிரியில் ரெக்ஸ் பரிசு பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரெக்ஸ் பரிசு பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா.!

கிருஷ்ணகிரியில் ரெக்ஸ் பரிசு பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நகரம்,  ராயக்கோட்டை சாலையில் சந்திரசேகர் மருத்துவமனை அருகே  ரெக்ஸ் பரிசு பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்  மாநில நுகர்வோர் சங்க  பொதுசெயலாளர் டாக்டர். சந்திரமோகன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

டாக்டர் சந்திரமோகன் பேசியதாவது: 
இளம் தொழில் அதிபர்களாக வளர்ந்து வரும் சசிரேகா,வினோத் இருவருமே கிருஷ்ணகிரி மக்களுக்கு நவீன உலகத்தில் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்க கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் பரிசுப்பொருட்கள் அங்காடி திறந்துள்ளது கிருஷ்ணகிரி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பரிசு பொருட்களை வாங்கியுள்ள ஜெய்சன் பேசுகையில் நான் டிஜிட்டல் உலகத்தில் பரிசு பொருட்கள் வாங்க பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லவேண்டிய நிலையில், தற்பொழுது கிருஷ்ணகிரியில் கிடைப்பது மகிழ்ச்சி என பேசினார். 

விழாவில் தலைமை நிர்வாகிகள் மனோகரன், ஜெயவேல், முனிரத்தினம், தேன்மொழி, குமரேசன், அனீஸ், கனகதாஸ்ச, ரோட்டரி கிளப் சேர்மேன் பிரேம்குமார், தலைவர் சிவகுருநாதன், துணைத் தலைவர் சர்மிளா உள்ளிட்ட ஏராளமான  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ