தென்காசியில் த வெ க வினர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

தென்காசியில் த வெ க வினர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .!

தென்காசியில் த வெ க வினர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 

தென்காசி நவ 16


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என த.வெ.க தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி தென்காசி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ், மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் மதிய உணவு விநியோகம் செய்யப்பட்டது.இதில் 300 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்