இலஞ்சி பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் 5 இடங்களில் நடை பெற்றது .!
தென்காசி
இலஞ்சி பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் 5 இடங்களில் நடை பெற்றது
தென்காசி நவ 28
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூர் திமுக சார்பில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி, தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.
இலஞ்சி இங்கிலீஷ் பிரைமரி பள்ளி மற்றும் ஐ சி ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், தென்காசி செங்கோட்டை ரோடு இலஞ்சி சவுக்கை முக்கு முன்பும், மதுரை குற்றாலம் ரோடு திமுக அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அதன் பிறகு திருவிலஞ்சி குமாரர் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் திமுக பிரதிநிதி சுடலையாண்டி, இலஞ்சி குமாரகோவில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, துணை செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன் மாரிராஜ் ஒன்றிய பிரதிநிதிகள் தேவி கணேசமூர்த்தி காளிராஜ் வார்டு செயலாளர்கள் சிவக்குமார் செல்லப்பா மகேஷ் அங்கப்பன் ராஜ் வசந்தகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் பாலகிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தி சொர்ணராஜ் பரதன் அறிஞர், முத்துக் குமாரசாமி, முருகன் குமார், சுப்பிர மணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
