குற்றாலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு..!
தென்காசி

குற்றாலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு.
தென்காசி ஜூலை 10
தென்காசி மாவட்டம் குற்றாலம் ரோட்டரி சங்க 70 வது ஆண்டு நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
குற்றாலம் ரோட்டரி அரங்கில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தலைவர் கை.முருகன், புதியதலைவர் ஜேகேடி.சைரஸ்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் செயலர் ஆசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.ரோட்டரி உதவி ஆளுநர் ஸ்டாலின் ஜவகர் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னாள் ரோட்டரி ஆளுநர் அசோக்பத்மராஜ் சிறப்பு அழைப்பாளராகவும், கே.ராஜகோபால் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு பேசினர்.
புதிய உறுப்பினர்களாக தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் அறங்காவலர்குழு தலைவர் பாலகிருஷ்ணன், கங்காதரன்,சார்லஸ்,சிவசுப்பிரமணியன்,வழக்கறிஞர் மாடசாமி பாண்டியன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
விழாவில் தென்காசி,குற்றாலம்,இலஞ்சியில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் 5 நபர்களுக்கு சான்றிதழ்,கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் உதவி ஆளுநர்கள் எம்.ஆர்.அழகராஜா,
கணேசமூர்த்தி,ராம
கிருஷ்ணன்,சங்கரநாராயணன், தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன்,வி.கேகணபதி,சங்க முன்னாள் தலைவர்கள் கார்த்திக்குமார், ஏ.கே.கல்யாணகுமார்,சந்திரன்,மற்றும் டாக்டர்.அப்துல்அஜீஸ்தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் கேஎன்எல்.சுப்பையா, பொருளாளர் திருவிலஞ்சிக்
குமரன், ராமன், லிங்கராஜ், ராதாகிருஷ்ணன்,
ஆசிரியர் கண்ணன்,நாராயணராஜா,முருகையா,
அருள்,சங்கரன் கலந்துகொண்டனர்.முன்னாள் உதவி ஆளுநர் டிஎன்.அருணாசலம் தொகுத்து வழங்கினார். செயலாளர் பா.பிரகாஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்