தென்காசிக்கு முதல்வர் வருகை தள்ளிவைப்பு அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி .!
தென்காசி
தென்காசிக்கு முதல்வர் வருகை தள்ளிவைப்பு அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
தென்காசி அக் 22
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதல்வர் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,
அவர் அளித்த பேட்டியில்
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட சற்று கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வருவாய்துறை அதிகாரிகள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையும் பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவ மழையினால் உயிர் சேதம் இல்லாத அளவிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேளாண் துறையினர் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது குறித்த விபரங்களை கணக்கெடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டும் தென்காசி மாவட்டத்தில் 14 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது 6 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது அதற்குரிய நிவாரணம் உடனடியாக வழங்கப் பட்டுள்ளது.
மழை தொடர்வதால் இனி வரும் பாதிப்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கையில் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து எந்த அளவிற்கு விரைவாக அகற்றப்பட முடியுமோ அந்த அளவிற்கு அகற்றப்படும்.
தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வரும் 24, 25 தேதிகளில் வருவதாக இருந்தது கன மழை காரணமாக வருகை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது மழை நின்றவுடன் முதல்வர் வருகை இருக்கும் என பேட்டி அளித்தார். பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திட்ட இயக்குனர் தண்டபாணி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
