குற்றாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!
தென்காசி

குற்றாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் துவக்கி வைத்தார்
தென்காசி ஆகஸ்ட் 19
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 4 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குற்றாலம் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்தார். குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான கிருஷ்ண ராஜா, குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இதில்
4 வது வார்டு மாற்றுத் திறனாளி நாராயணன் என்பவருக்கு மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையினை விண்ணப்பித்த உடனே பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் ராமையா என்ற துரை,குற்றாலம் பேரூர் திமுக துணைச் செயலாளர் கருணாநிதி என்ற மாரியப்பன், குற்றாலம் அறங்காவலர் குழு உறுப்பினரும், மன்ற உறுப்பினருமான
ஸ்ரீதர்,மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ் வார்டு செயலாளர்கள் முத்துக்குமார், பால்ராஜ், நாராயணன், சக்திஸ் கணேஷ், குத்தாலிங்கம்,
முன்னாள் மணியம் பரமசிவம், ஆவின் முருகன், குடியிருப்பு அருண், நெல்லை கண்ணன், ஜிம் ஜெய்சங்கர், ஆதி திராவிட அணி ராமர், கொட்டாகுளம் பரமசிவம், காசிமேஜர்புரம் மூக்கன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்