மலேசியாவை அதிர வைத்த விஜய்.! சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். !

ஜனநாயகன் ஆடியோ வெளியீடு

மலேசியாவை அதிர வைத்த விஜய்.! சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். !

மலேசியாவை அதிரவைத்த விஜய்..ஒரு லட்சத்தை நெருங்கும் ரசிகர்கள் எண்ணிக்கை

விஜயின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருவது போல் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண நாலா பக்கமிருந்தும் படையெடுத்து வருகிறார்கள்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் இருந்து வருபவர் நடிகர் விஜய். அவரது. கரியரின் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். வரும் பொங்கலுக்கு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் குவாலா லம்பூர் புகிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு பிரியாவிடை கொடுக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.

விடைகொடுக்கும் விஜய்

தனது படத்திற்காக விஜய் மேடையேறுவது இன்றுதான் கடைசி நாள். இதனால் மலேசியாவில் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளார்கள். இரண்டு கட்டமாக ஜனநாயகன் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. முதலாவதாக தளபதி திருவிழா நிகழ்ச்சியில் விஜயின் ஹிட் பாடல்களை பாடகர்கள் மேடையில் பாடி வருகிறார்கள். பின்னணி பாடகர் எஸ்.பி.பி சரண் , ஸ்வேதா மோகன் , திப்பு உள்ளிட்ட பல பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.

இரண்டாவதாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நடைபெறும். படத்தின் இசையமைப்பாளர் அனிருத் லைவாக படத்தின் பாடல்களை பாட இருக்கிறார். படக்குழுவினர் பேசியபின் கடைசியாக விஜய் பேசி ரசிகர்களுக்கு விடைகொடுக்க இருக்கிறார்.

90 ஆயிரம் ரசிகர்கள்

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு 85 முதல் 90 ஆயிரம் ரசிகர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ 2000 முதல் 7000 வரை இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் விலை அதிகமென்ற போதும் புக்கிட் ஜலில் தேசிய மைதானம் கிட்டதட்ட முழுவதும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது . நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வருகையால் 3 கிலோமீட்டர் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.