மருத்துவர்கள் தினம் மத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து இன்று 01.07.2025 மருத்துவர்கள் தினம் மத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.
இதில் மருத்துவர்களுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் வழங்கியும் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை கௌரவிக்கப்பட்டது.
இந்த இனிமையான நிகழ்வில் ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்களும் மத்தூர் அனைத்து வணிகர் சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ