கலிங்கப்பட்டியில் ஜன 17 முதல் 20 வரை இலவச மருத்துவ முகாம்.!
தென்காசி
கலிங்கப்பட்டியில் ஜன 17 முதல் 20 வரை இலவச மருத்துவ முகாம்
தென்காசி, டிச - 14
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப் பட்டியில் ஜனவரி 17 முதல் 20 முடிய நான்கு நாட்கள் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் அவரது தம்பி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வை.ரவிச்சந்திரன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலிங்கப்பட்டி ஊராட்சியினை கண் போல் காத்து வருகின்றனர்.
மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நெஞ்சில் நிறைந்த கலிங்கப்பட்டியில் வரும் 2026 ஜனவரி 17முதல் 20 முடிய ஆகியநான்கு நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடன்
கலிங்கப்பட்டி ஊராட்சி இணைந்து தலைவர் வைகோ வழிகாட்டுதலில்
கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமினை கலிங்கப்பட்டியில் நடத்துகின்றனர்.
இம் முகாமிற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்திட மதுரை அப்பல்லோ மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் கலிங்கப்பட்டி வருகை தந்தனர். அவர்கள் முகாம் நடைபெறும் இடமான கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டனர். மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.
மருத்துவ முகாம் நடைபெற உள்ள இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
மதுரை அப்பல்லோ மருத்துவ குழுவினர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்மணிமொழி சந்துரு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
