அதிமுக வில் இருந்து விலகி த.வெ.க வில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர். !

தவெக

அதிமுக வில் இருந்து விலகி த.வெ.க வில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர். !

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததைத் தொடர்ந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஏற்கனவே விஜய்யின் கரத்தை பலப்படுத்திய நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் இன்று (ஜனவரி 2) அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைந்தார்.

​ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் இருந்து விலகிய ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

"செங்கோட்டையன் இணைந்த போதே இன்னும் பல முக்கிய முகங்கள் வருவார்கள்" என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜே.சி.டி. பிரபாகரின் இந்த வருகை தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 2026 தேர்தலுக்கான கட்சியின் பலத்தை கூட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.