தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கூட்டம் .!
கிருஷ்ணகிரி

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் S.கண்ணு மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா. சேகர் மாநில நிர்வாகக் குழு முடிவுகளை விளக்கி பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் G.R சக்கரவர்த்தி, கிருஷ்ணகிரி வட்ட தலைவர் M. சிவநாதன், பர்கூர் வட்ட செயளாலர் பூபேஸ், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் R. பூபதி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் CPI ரஜியாபேகம், கிருஷ்ணகிரி ஒன்றிய துனை செயலாளர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு உறுப்பினர் பதிவு செய்து எதிர் வரும் 30/9/2025 அன்று தோழர் சீனிவாசராவ் நினைவு தின நாளில் முடிப்பது எனவும், ஊத்தங்கரை வட்டம் 1000 , கிருஷ்ணகிரி வட்டம் 1000, அரசம்பட்டி1000, போச்சம்பள்ளி 1000, பர்கூர் 1000 என 5000 உறுப்பினர்களை பதிவு முடிப்பது அனைத்து வட்டங்களில் கிளை மாநாடுகளை நடந்துவது என முடிவு செய்யப்பட்டது
வேலை உறுதியளிப்பு சட்டப்படி 100 நாள் வேலை கொடு வேலை கொடுக்காவிட்டால் வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு சட்டப் படி வேலையில்லா கால இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும்,
நடைமுறையில் இல்லாத உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட்டு விவசாய தொழிலாளர்கள் நலவாரியம் உடனே அமைத்திட வேண்டும்,
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு தீபாவளி போனஸ் ₹5000 வழங்க நடவடிக்கை எடுக்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் எதிர் வரும் 07/10/2025 அன்று கிருஷ்ணகிரியில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் S. கண்ணு மாவட்ட தலைவர் தலைமையில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ