நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் துவக்கி வைத்தார் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் துவக்கிவைத்த இம்முகாமில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
வரட்டனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, ஊனமுற்றோர் மருத்துவ முகாம், இருதய மருத்துவ சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மற்றும் மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
மக்கள் பயன் பொறும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம், ஒரப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமாக மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் இந்த முகாமில் ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டைகளையும் மருத்துவர்கள் உடனடியாக வழங்கி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த மருத்துவ முகாமில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்களான சிவகுமார், ராஜலட்சுமி, கார்த்திகேயன், இதியாள் மண்டோதரி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மணிவண்ணன், கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
