கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்க கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் தனது விருப்ப மனு அளித்தார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மூன்று சட்ட தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.
தமிழகத்தில் வருகின்ற மே மாதம் நடைப்பெற உள்ள சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொடுக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மற்றும் பர்கூர், ஊத்தங்கரை, அரூர் ஆகிய மூன்று சட்ட மன்ற தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிட சென்னையில் அமைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பி.சி. சேகர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அவர்களிடம் தனது விருப்ப மனுவை வழங்கினார்,
அப்போது மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, முன்னாள் மாவட்டத் தலைவர் நாரயணமூர்த்தி ,திருப்பத்தூர தம்பி வெங்கடாசலம், கிழக்கு மாவட்ட சேவாதள தலைவர் தேவராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்த்த பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
