பருத்தி சாகுபடி மேலாண்மை குறித்த நேரடி செய்முறை பயிற்சி.!
தஞ்சாவூர்

பருத்தி சாகுபடி மேலாண்மை குறித்த நேரடி செய்முறை பயிற்சி.
பாபநாசம் தாலுக்கா, மட்டையாந்திடல் விவசாய பண்ணையில் பருத்தி சாகுபடி மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு புளோபுரோ நிறுவனத்தின் நிர்வாகி கருப்பன்செட்டி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய பருத்தி கழகத்தின் முதன்மை விஞ்ஞானி மாணிக்கம், விஞ்ஞானிகள் ராஜா, சங்கர் கணேஷ், ஆகியோர் பருத்தி சாகுபடியில் உள்ள பிரச்சனைகள் பருத்தி செடிகளை தாக்கும் நோய்கள் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினர்.
மேலும் பருத்தி சாகுபடி விதை நேர்த்தி செய்யும் முறைகள், களை எடுத்தல், உர மேலாண்மை, பூச்சிகளை கட்டுப்படுத்தும். முறைகள் ஆகியவை குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு மஞ்சள் நோய் உள்பட பல்வேறு நோய் தாக்குதல் காய்கள், பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க என்ன செய்யலாம் என பல்வேறு கேள்விகள் எழுப்பினர் இதற்கு வேளாண்மை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இறுதியில் மேலாளர் திருஞானம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அதிகாரி சத்தியமூர்த்தி, கொள்முதல் உதவியாளர் ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்