கட்டிகானப்பள்ளி கனிமவள நிதியின் மூலம் ரூ.82 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

கட்டிகானப்பள்ளி கனிமவள நிதியின் மூலம் ரூ.82 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க பூமி பூஜை. !

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், கிருஷ்ணகிரி நகராட்சி கட்டிகானப்பள்ளி கனிமவள நிதியின் மூலம் ரூ.82 இலட்சம் மதிப்பீட்டில் இராயக்கோட்டை சாலை ஹவுசிங் போர்டு பேருந்து  நிறுத்தம் முதல் கண்ணப்பன் நகர் வரை KM 0/0-0/350 H/O கட்டிகானப்பள்ளி  Double Lane-R-378 தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான தே.மதியழகன்., MLA , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை  தொடங்கி  வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்  அரசு துறை அலுவலர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள் கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பூமி பூஜையினை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ