தமிழ்வளர்ச்சித்துறை  சார்பாக திருக்குறள் திருப்பணி பதினைந்தாம் நாள் வகுப்பு.!

கிருஷ்ணகிரி

தமிழ்வளர்ச்சித்துறை  சார்பாக திருக்குறள் திருப்பணி பதினைந்தாம் நாள் வகுப்பு.!

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை  சார்பாக திருக்குறள் திருப்பணி பதினைந்தாம் நாள் வகுப்பு
இன்று  4.12.25.  காவேரிப்பட்டினம் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி தபோவனத்தில்  திருக்குறள் திருப்பணி வகுப்பு நடைபெற்றது. 

அதில் முனைவர் மருதம் க.அருள் முதல்வர் வரவேற்றார். இந்த நிகழ்விற்கு முன்னிலை வகித்த தாளாளர்  ந. நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். மேற்பார்வையாளராக மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் மற்றும் கல்வியாளர் மு.ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் பயிற்றுனராக  மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி நிறுவனர் கிருஷ்ணகிரி ஸ்ரீனிவாச கல்வி மைய நிறுவனர் ஜெ.பாலாஜி,  ஆசிரியை திருமதி லதா, தமிழ் ஆசிரியைகள்  திருமதி. சரஸ்வதி, மற்றும் திருமதி சகுந்தலா  அவர்கள்  திருக்குறள் திருப்பணி  வகுப்பு மாணவ மாணவியருக்கு சிறப்பாக நடத்தினர்.

இதில் மாணவ மாணவிகள் 52 க்கும் மேற்பட்ட ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் தாளாளரால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிறைவில் பட்டதாரி ஆசிரியை திருமதி கனகவள்ளி  நன்றி நவில, சிறுதீனி வழங்கி நிறைவு பெற்றது.

செய்தியாளர்

மாருதி மனோ