மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக, மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா - "இது நம்ம ஆட்டம் 2026" விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் (பொ) நடராஜ முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
